மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

மேல் கொத்மலை நீரேந்து பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதன் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தற்போது திறக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை சாதாரண மட்டத்தில் பேணுவதற்காக, இந்த வான் கதவு திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

எதிர்வரும் நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ள மழை எதிர்வுகூறல்களின் படி, தற்போது நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றில் உள்ள நீர் மட்டம் குறைக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அநுராதபுரம் மாவட்டத்தின் நாச்சதூவ, இராஜாங்கனை, தெதுரு ஓயா, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹர, வெஹரகல மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சேனாநாயக்க சமுத்திரத்திலும் தற்போது நீர் மட்டத்தை குறைப்பதற்காக நீர் வௌியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இவ்வாறு விடுவிக்கப்படும் நீரின் அளவினால் தாழ் நிலப்பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள எதிர்வுகூறல்களின் படி எதிர்காலத்தில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதால், இந்த நிலைமைகளை கண்காணிப்பதற்காக நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் 24 மணித்தியாலங்களும் திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக அறிவூட்டல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் பருவப்பெயர்ச்சி மழை தற்போது தீவிரமடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதால் இது தொடர்பில் அவதானமாக இருப்பது முக்கியம் என்றாலும், நிலவும் நிலைமைகளுக்கு அமைய இதுவரை எவ்வித ஆபத்தான நிலைமையும் ஏற்படவில்லை என பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

un

சுதீப் – விக்ராந்த் இணைந்து மிரட்டும் ‘அன்டர்-18’

May 31, 2026

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்- பான் இந்திய நடிகருமான கிச்சா சுதீப் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மையான வேடத்தில்

aa

புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் ஆகாஷ் முரளி

May 31, 2026

‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆகாஷ் முரளி அடுத்ததாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை அறிமுக

ar

‘கான் சிட்டி’ திரைப்பட ‘பிராடு பயலே..’ பாடல் வெளியீடு

May 31, 2026

நடுத்தர மக்களின் பெரும் கனவான பணத்தை மையப்படுத்தி கற்பனையுடன் தயாராகி இருக்கும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பிராடு

kathai so

தமிழில் அறிமுகமாகும் டிஜிட்டல் தளம்- ‘கதை ஷார்ட்ஸ்’

May 31, 2026

ரீல்ஸ்கள் – மீம்ஸ்கள் என சமூக ஊடக வலைதளங்களை.. பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பாவிக்கும் டிஜிட்டல் தள ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து

pikk

பல்லேகம தேரர் விவகாரம்; அஸ்டமஸ்தான குழுவின் முடிவு

May 31, 2026

மல்வத்த மகா விகாரையின் அஸ்டமஸ்தான குழு, வட மத்திய மாவட்டத்தின் பிரதம சங்கநாயக்கரும், ருவன்வெலி சைத்யரமாதிகாரரின் பொறுப்பாளருமான வணக்கத்திற்குரிய எத்தலேவத்துனுவேவ

sl

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு கொள்முதல் ரத்து

May 31, 2026

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு திட்டத்துடன் தொடர்புடைய கொள்முதல் செயல்முறையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய

sea

கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் மாயம்

May 31, 2026

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம – கலமெட்டிய கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாகக் காவல்துறை

death

மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் போதகர் மரணம்

May 31, 2026

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் நடுவத்தைப் பிரிவில், மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர்

prasa

புலம்பெயர் தொழிலாளர் உரிமைகள் குழுத் தலைவராக பிரசாத் காரியவசம்

May 31, 2026

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவராக இலங்கையின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் பிரசாத்

acc

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு – பேருந்து சாரதி கைது!

May 31, 2026

புத்தளம், கரம்பை – உடப்பு பிரதான வீதியின் சமீரகம பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும்

crim

கையடக்கத் தொலைபேசியைக் கொடுக்காததால் 11 வயது தங்கை கொலை; 14 வயது அண்ணன் கைது

May 31, 2026

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றில், 11 வயதுடைய தனது சொந்தத் தங்கையைக் கழுத்தை நெரித்துக்

rain

இன்று பல பிரதேசங்களில் மழை

May 31, 2026

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை