முஸ்லிம்கள் வாக்களிக்காததால் தான் எமது சடலங்களை கோட்டாபய எரித்தார் – உதுமா லெப்பை எம்.பி.

கோட்டாபய ஜனாதிபதியாக முஸ்லிம் சமூகம் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதனால் தான் கொரோனாவில் மரணமான எங்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு தீர்மானிததார் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த உண்மையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உதுமா லெப்பை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் பாரியளவில் வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிலவி வருகின்றன. அந்தவகையில் , 34 வைத்திய அதிகாரிகள், 38 வைத்திய நிபுணர்கள், வைத்திய அத்தியட்சகர் 3, பல் வைத்தியர் 16 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. மேலும் குடியிருப்பு வைத்திய அதிகாரி 3 வெற்றிடங்கள், மருந்து கலவையாளர் 67 வெற்றிடங்கள்.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் 31 வெற்றிடங்கள். மருத்துவ மாது 21 வெற்றிடங்கள் மருத்துவ ஆய்வகத் தொழிநுட்பவியலாளர் 14 வெற்றிடங்கள், சுகாதார சேவை உதவியாளர் (ஜூனியர்)205 வெற்றிடங்கள். ஆயுர்வேத வைத்தியசாலை தாதியர் 56 வெற்றிடங்கள், ஆயுர்வேத வைத்தியசாலை ஊழியர் 26 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் சுகாதார தொண்டர்களாக 1999ஆம் ஆண்டில் இருந்து பணிபுரிபவர்களுக்கு இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை. இதுதொடர்பில் கிழக்குமாகாண சுகாதார தொண்டர் சங்கம் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. எனவே கிழக்கு மாகாண சுகாதார தொண்டர்களாக பணிபுரிபவர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.

மேலும் நிந்தவூரில் பொதுமக்களால் 4 ஏக்கர் காணி வழங்கப்பட்டு சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டினால் அத்திவாரம் இடப்பட்டு இடைநிறுத்தப்பட்ட நிந்தவூர் மகளிர்,சிறுவர் வைத்தியசாலையினை நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொள்வதுடன் நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நிந்தவூர் பொதுமக்களால் 2 ஏக்கர் காணி வழங்கப்பட்ட நிலையில் கட்டிடங்கள் கட்டப்படாத நிலையில் உள்ளது.

எனவே, நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கான நிரந்தரக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான நிதிகளை சுகாதார அமைச்சின் சுதேச மருத்துவ பிரிவு ஒதுக்க வேண்டும். இதேவேளை, சுகாதார அமைச்சரிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இப்பாராளுமன்றத்தில் கொரோனாவினால’ மரணம் அடைந்து எரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை கேட்டிருந்தார். அதன் பின் நான் சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனாவினால் மரணமடைந்து எரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை வழங்குமாறு முன்மொழிவினை வைத்தேன்.

இதுவரையும் எனது முன்மொழிவிற்கான பதில் சுகாதார அமைச்சினால் அனுப்பிவைக்கப்படாமல் உள்ளது. கோத்தபாய ராஜபக்ஷ்வுக்கு ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் வாக்களிக்கவில்லை என்பதனால் தான் கொரோனாவில் மரணமான எங்களின் ஜனாஸாக்களை எரித்தார் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த உண்மையாகும். நீதி மறுக்கப்பட்ட எமது சமூகத்தின் இந்த நியாயமான கோரிக்கையினை ஏன் இன்னும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கின்றீர்கள் என கேட்கிறேன் என்றார்.

4

சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல! – ஜெயக்குமார் ஆவேசப் பதிவு!

June 24, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திமுக-வை நையாண்டி செய்து பேசிய குட்டிக்கதை, எதிர்க்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

3

பட்டியலின மக்களுக்கு மறுக்கப்பட்ட ஆலயப் பிரவேசம்; அதிரடி காட்டிய தமிழக அரசு!

June 24, 2026

கரூர் மாவட்டம்: கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், புஞ்சை கடம்பன்குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் அருள்மிகு

sajith 2026

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்தி, மாகாண சபைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

June 24, 2026

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாட்டின் உச்சக்கட்ட சட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதால் அது பாதுகாக்கப்பட வேண்டும். எனினும், அதனைப்

2

இன்னும் நடிகராகவே செயல்படுகிறார் முதலமைச்சர் விஜய்! – சிவசங்கர் அதிரடிப் பேட்டி!

June 24, 2026

சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திமுக மீது முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர், அண்ணா

729115779_1015905364372317_7450818906267864328_n

வடக்கு மாகாணத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகள் -பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன்

June 24, 2026

வடக்கு மாகாணத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகளைத் தடுக்கும் வகையில், நொத்தாரிசு சட்டத்தில் மேற்கொள்ளப்பட

vikatan_2026-05-22_za0m24b3_ramesh

குன்னூர் ரூ.15 கோடி கார் பார்க்கிங் பணி ரத்து – அறநிலையத்துறை அதிரடி!

June 24, 2026

சென்னை: குன்னூர் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான நிதியிலிருந்து சுமார் ரூ. 15 கோடியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கும்

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய பெண் கொலை வழக்கு: பிரதான சந்தேக நபருக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் ஓட்டுநர் கைது

June 24, 2026

தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபருக்கு உதவினார் மற்றும்

Screenshot_20260624_132345_Editor-Lite

இலங்கையின் கனிம வளங்களால் பயன்பெறுவது யார்? நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

June 24, 2026

அரசாங்கத்தின் தேசிய கனிமக் கொள்கை (National Mineral Policy) மற்றும் கனிம அகழ்வாராய்ச்சி, சுரங்க அகழ்வுக்கான உரிமங்கள் (Licences) வழங்கப்படுவது

suresh11

சலே நடமாடுகிறார், அவராகவே ஆடை அணிகிறார்: அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல்

June 24, 2026

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே, மோசமாக

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய பெண் கொலை : பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது

June 24, 2026

நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது

myan

ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிறை?

June 24, 2026

தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள மியான்மார் பகுதிகளில் இயங்கி வரும் ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் இன்னும் 5,300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக

Nada

யாழ்.பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலை பிரதிஷ்டை?

June 24, 2026

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்