இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மத்திவ் ஜோன் டக்வேர்த் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் பற்றியும், இரு நாடுகளின் மக்களுக்கு இடையேயான உறவுகள் பற்றியும் கவனம் செலுத்திய பிரதமர், பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் பிராந்திய உரையாடலை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் இலங்கையின் ஆர்வம் குறித்தும் நினைவுபடுத்தியதுடன், பிராந்திய மற்றும் பல்தரப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அத்தோடு, தொழில்சார் கல்வித் துறையின் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதின் அவசியம் குறித்து இந்தக் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது. தொழில்சார் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒழுங்குமுறைச் சட்டகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவை கோரிய பிரதமர், தொழில்சார் கல்வித் துறையை பலப்படுத்துவதற்கான அறிவு, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மத்திவ் ஜோன் டக்வேர்த் , முதல் செயலாளர் (அபிவிருத்தி) திருமதி. Zoe Kidd மற்றும் இலங்கை Austrade இன் கல்விப் பணிப்பாளர் திருமதி. Sandi Seneviratne,பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகஹவத்த, கிழக்காசிய மற்றும் ஓசியானியா பிரிவின் பணிப்பாளர்   Dhawood Amanullah, கிழக்காசிய மற்றும் ஓசியானியா பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. திலோமா அபயஜீவ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

By C.G.Prashanthan

in

இலங்கை அகதிகள் கோரிக்கை!

November 24, 2026

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது நாட்டைவிட்டு வெளியேறி, இந்தோனேசியாவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பல இன்னல்களுக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டுள்ள

muji

இலங்கையில் மொசாட் உளவாளிகளா?

November 24, 2026

இலங்கையில் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கும் மொசாட் உளவாளிகளுக்கும் அனுமதி வழங்குவது நாட்டின் தேசிய பாதுகாப்பு, எதிர்காலம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக

robb

கொழும்பில் தங்க நகைக் கொள்ளை

November 24, 2026

கொழும்பில் உள்ள தங்க நகைக் கடைகளில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் 37

IMG_2560

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

November 24, 2026

இலங்கையின் இலத்திரனியல் பயண அனுமதிப் பத்திரம் வழங்கும் உத்தியோகபூர்வ இணையதளம் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

IMG_2585

நாட்டின் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியது

November 24, 2026

நாட்டின் வளிமண்டலத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இந்தியாவின் நச்சுப் புகை, வடகிழக்குப் பருவக்காற்றுடன் இணைந்து விலகிச் சென்றுள்ளதாக மத்திய சுற்றாடல்

IMG_2584

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்!

November 24, 2026

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது. 4,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய

IMG_2583

திருமண விளம்பரங்கள் குறித்து அரசாங்கம் அவதானம்!

November 24, 2026

சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் மூடநம்பிக்கை விளம்பரங்கள், சமூகத்தைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் உள்ளடக்கங்கள் மற்றும் வன்முறையை

IMG_2582

இலங்கை அகதிகள் உருக்கமான கோரிக்கை!

November 24, 2026

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது நாட்டைவிட்டு வெளியேறி, இந்தோனேசியாவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பல இன்னல்களுக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டுள்ள

vikatan_2026-11-23_ubr0qbgo_New-Project-44

“அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்குப்பதிய முன் அனுமதி வேண்டும்!” – ஆளுநருக்கு திமுக கடிதம்!

November 24, 2026

சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி கொடுக்க ஒருவர் முன்வந்ததாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

pil

இரண்டு பிள்ளைகளுடன் உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட நபரால் பரபரப்பு

November 24, 2026

தமது இரண்டு குழந்தைகளுடன் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து நபர் ஒருவர் வாவியில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட சம்பவத்தால்

tr

இந்து சமுத்திரத்தில் நிலத்திலநடுக்கம்

November 24, 2026

இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ship

கடலில் பழுதடைந்த சரக்குக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது

November 24, 2026

நடுக்கடலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழந்த சரக்குக் கப்பல் ஒன்று, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. சைப்ரஸ்