சிம்பு நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49 திரைப்படம் தயாராக இருந்தது.ஆனால் அப்படம் திடீரென தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இப்படம் குறித்து நாயகி கயாடு லோஹர் அப்டேட் ஒன்றை தெரிவித்திருக்கின்றார்.
சிலம்பரசன் இந்தாண்டு தனது பிறந்தநாளை முன்னிட்டு அடுத்தடுத்து மூன்று பட அறிவிப்புகளை வெளியிட்டு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தினார். அந்த மூன்று படங்களில் பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்த படமும் ஒன்று. STR 49 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் பூஜை கூட மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. பல வருடங்கள் கழித்து சந்தானம் சிம்புவுடன் இப்படத்தில் இணைந்து நடிக்க இருந்தார்.
கயாடு லோஹர் தான் இப்படத்தின் நாயகி. மிகப்பிரம்மாண்டமான முறையில் உருவாகவிருந்த இப்படம் ஒரு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அரசன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். என்னதான் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்துக்கொண்டு இருந்தாலும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு -சந்தானம் இணைந்து நடிக்க இருந்த படம் எப்போது துவங்கும் ? நடக்குமா ? நடக்காதா ? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்துகொண்டே வருகின்றது.
தற்போது அதற்கான விடையை அப்படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டான கயாடு லோஹர் தெரிவித்திருக்கின்றார். சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்படம் குறித்து பேசிய கயாடு லோஹர், சிம்பு மற்றும்ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியில் தயாராகவிருந்த திரைப்படம் அடுத்தாண்டு துவங்கும் என நினைக்கின்றேன். இயக்குனர் அப்பட வேலைகளில் தான் தற்போது இருக்கின்றார்.அடுத்தாண்டு அப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கின்றேன் என்றார் கயாடு லோஹர்.
இதன் மூலம் இப்படம் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை சிம்பு ரசிகர்களிடம் வந்துள்ளது. ஏற்கனவே இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பேசுகையில், கண்டிப்பாக சிம்புவுடனான படம் நடக்கும், ஆனால் எப்போது என்பது தான் கேள்வியாக உள்ளது என பேசியிருந்தார். தற்போது கயாடு லோஹர் பேசுகையில், அடுத்தாண்டு இப்படம் நடக்கும் என நம்புவதாக தெரிவித்திருக்கின்றார். எனவே சிம்பு மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் படம் தொடர்பாக பாசிட்டிவான செய்திகளே வருவதால் கண்டிப்பாக இப்படம் அடுத்தாண்டு துவங்கிவிடும் என்றே தெரிகின்றது.