திருகோணமலை கடற்கரை பகுதிக்கு சென்ற தடயவியல் பொலிஸார் புத்தர் சிலை விவகாரம், அதன் சேத நிலைவரம் தொடர்பில் கண்டறிய, கள ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் உடைந்த பொருட்கள் மற்றும் கம்பி வேலி தொடர்பில் பரிசீலனை செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பகுதியில் புத்தர் சிலை வைக்கும்போது ஞாயிற்றுக்கிழமை (16) இரவு பொலிஸார் மூலம் அகற்றப்பட்டு மீண்டும் மறுநாள் திங்கட்கிழமை (17) பகல் அதே இடத்தில் அந்த புத்தர் சிலையை திருகோணமலை துறைமுக பொலிஸாரின் பாதுகாப்புடன் மத சடங்குகளுடன் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அப்பகுதியில் விகாரையில் இடம்பெற்ற சேத விபரங்களை அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு பரிசீலனைக்காக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது குறித்த பௌத்த விகாரைக்காக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.