சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன 2026 உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில், நேற்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற நோர்வேயுடனான போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் இத்தாலி தோற்றது.
நோர்வே சார்பாக எர்லிங் ஹலான்ட் இரண்டு கோல்களையும், அந்தோனியோ நுஸா, ஜோர்ஜன் ஸ்ரான்ட் லர்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். இத்தாலி சார்பாகப் பெறப்பட்ட கோலை பியோ எஸ்பொஸிட்டோ பெற்றார்.