தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பின் இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார்.
ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல்நிலை வீரரான கார்லோஸ் அல்கரஸை எதிர்கொண்ட இத்தாலியின் சின்னர் 7-6 (7-4), 7-5 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனானார்.
தனது அரையிறுதிப் போட்டியில் ஐந்தாம் நிலை வீரரான பீலிக்ஸ் ஆகர்-அலிஸிம்ம்மை எதிர்கொண்ட ஸ்பெய்னின் அல்கரஸ் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்றும், ஏழாம் நிலை வீரரான அலெக்ஸ் டி மினோரை எதிர்கொண்ட சின்னர் 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வென்றுமே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தனர்.