2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை இலக்கை மீறி, இலங்கை சுற்றுலாத் துறை இன்று (17) ஒரு முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது.
லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் UL 504 மூலம் வந்த பிரித்தானியாவைச் சேர்ந்த திரு. காரன் ரஃபேல் (Mr. Caron Raphael) மற்றும் திருமதி. சார்லட் கிளேயர் (Mrs. Charlet Claire) ஆகியோர் 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை மைல் கல்லை இவ்வாறு குறித்தனர்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவர்களை இலங்கை சுற்றுலா அமைச்சகத்தின் பிரதிநிதிகள், இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் அதிகாரிகள், அத்துடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் விமான நிலையம் மற்றும் வான்சேவை இலங்கை நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த வரவேற்பு விழாவின் போது, பாரம்பரிய கலாசார நடன நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு நினைவுப் பரிசுகளை வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.
By C.G.Prashanthan