யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொட்டடி கடற்தொழிலாளர்களின் படகு தரிப்பிடத்திற்காக தூர்வார்ப்பட்ட மண்ணை இதுவரை அகற்றவில்லை என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது குறித்த மண்ணை அகற்றுமாறு கோரி தவிசாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு பதிலளித்த தவிசாளர் உடனடியாக மணல் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.