இரத்தினபுரி, நிவிதிகல பகுதியில் 10 ஏக்கர் தனியார் தோட்டத்தில் 68 வயதுடைய பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 2 சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை கடந்த 14 ஆம் திகதி இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15 ஆம் திகதி காலை பெண் கொலை செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 2 இளைஞர்கள் அப்பகுதியை விட்டு தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2 சந்தேக நபர்களும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் 2 உறவினர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண் பதுரலியவில் உள்ள பெலவத்த பகுதியை சேர்ந்தவர் எனவும் 8 மாதங்களுக்கு முன்பு அந்த தோட்டத்திற்கு குடியேறியுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
2 சந்தேக நபர்களும் அங்குள்ள தோட்டத்தில் வசித்து வந்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் இருந்த இடத்திற்கு அடுத்துள்ள தோட்டத்தில் தங்கியிருந்தனர்.
2 இளைஞர்களும் மது அருந்திய பின்னர் கொலை செய்யப்பட்ட பெண்ணையும் அவரது கணவரையும் தடிகளால் தாக்கியதாகவும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தப்பியோடியுள்ளார்.
அவர் அடுத்த நாள் காலையில் நிவிதிகல பொலிஸ் நிலையத்திற்கு வந்து சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் மதுபானத்திற்கு அடிமையானவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.