யாழ்ப்பாணம் பகுதியில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மற்றும் இன்னுமொரு நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான கான்ஸ்டபிள், ஜனவரி 8, 2025 அன்று விடுமுறைக்கு திரும்பிய நிலையில் அதற்கு பின்னர் பணிக்கு வராததற்காக ஏப்ரல் 21 ஆம் திகதி பணிநீக்கம் உத்தரவு பெற்றுள்ளார்.
அவரிடம் இருந்து பொலிஸ் துறையால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை கண்டுபிடிக்க முடிந்ததாகவும் வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளது.