மாஸ்க் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்காக ஜி.வி பிரகாஷ் சம்பளம் வாங்கவில்லையாம். மேலும் பல படங்களுக்கு ஜி.வி பிரகாஷ் சம்பளம் வாங்காமல் இசையமைத்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது
வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் -ஆண்ட்ரியா நடிப்பில் மாஸ்க் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த வாரம் திரையில் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. தயாரிப்பாளராக வெற்றிமாறன் பட ப்ரோமோஷனில் கலந்துகொண்டு வருகின்றார். இப்படம் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் கடைசி படமாம். அதன் பிறகு படங்கள் தயாரிக்கப்போவதில்லை என்ற முடிவிற்கு வெற்றிமாறன் வந்துள்ளார்.
சென்னையில் மழை எந்தெந்த நாளில் தெரியுமா? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண் மாயம்.. அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
டெல்லி குண்டு வெடிப்பை தொடர்ந்து மீண்டும் குண்டு வெடிப்பு.. ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!
இப்படத்திற்கு வெற்றிமாறனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்.
மாஸ்க் திரைப்படம் பட்ஜெட் படமாகும். குறைவான பட்ஜெட்டில் இப்படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். அப்படி இருக்கையில் ஜி.வி பிரகாஷ் போன்ற ஒரு முன்னணி இசையமைப்பாளர் இப்படத்திற்கு இசையமைத்தது எப்படி என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கான விடை தற்போது கிடைத்திருக்கின்றது.