ஒன்டாரியோவில் பணிபுரிய அனுமதி கோரி கியூபெக் மருத்துவர்கள் 263 பேர் விண்ணப்பித்துள்ளதாக ”ஒன்டாரியோ மருத்துவர்கள் மற்றும் அறுவைசிகிச்சை நிபுணர்கள் கல்லூரி (CPSO)” அறிவித்துள்ளது.
கியூபெக்கின் சர்ச்சைக்குரிய மசோதா 2 (Bill 2) நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை திடீரெனப் பெருகுவது, மருத்துவர்களின் ஊதியத்தைச்சீரமைப்பதுடன் கடுமையான செயல்திறன் இலக்குகள் மற்றும் அபராதங்களை விதிக்கும் புதிய கியூபெக் சட்டத்திற்கு நேரடியான எதிர்ப்பாகும் எனக் கருதப்படுகின்றது
.
கடந்த ஐந்து மாதங்களில் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களின்
எண்ணிக்கையை விட, அக்டோபர் 23 முதல் சுமார் இரண்டே வாரங்களில் 13 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் கியூபெக் மருத்துவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன.