தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி. விலகியது குறித்து தன்னை வைத்து மோசமாக ஒருவர் ட்வீட் போட்டதை பார்த்த குஷ்பு அவருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். குஷ்புவின் பதில் பலரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது.
ரஜினி பட வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் இருந்த சுந்தர் சி.யிடம் இருந்து இப்படியொரு அறிவிப்பு வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதனால் சுந்தர் சி. வெளியிட்ட அறிக்கையை பார்த்த சினிமா ரசிகர்களால் அவர்களின் கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை.
இந்நிலையில் சிலரோ குஷ்புவால் தான் ரஜினி, கமல் படத்தில் இருந்து சுந்தர் சி. விலகிவிட்டார் போன்று என்று பேசுகிறார்கள். மேலும் சிலரோ, குஷ்புவை வைத்து மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கேட்டிருப்பாரோ ரஜினி என சூப்பர் ஸ்டார் மாதிரியே இருக்கும் ஒருவரின் புகைப்படங்களுடன் ட்வீட் செய்தார். எக்ஸ் தளத்தில் ஆக்டிவாக இருக்கும் குஷ்புவின் கண்ணில் அந்த ட்வீட் படவே, இல்ல உங்க வீட்டுல இருந்து யாரையாவது ஆட வைக்கலாம்னு நெனச்சோம் என்றார்.
குஷ்புவின் ட்வீட்டை பார்த்த அந்த நபரோ, எங்க வீட்ல யாரும் ஐட்டம் டான்ஸ் ஆட மாட்டாங்க மேடம் என்றார். அவரின் பதிலை பார்த்த குஷ்புவின் ரசிகர்களோ, ஒரு பெண்ணிடம் இப்படித் தான் மோசமாக பேசுவதா?. ஆன்லைன் என்பதால் முகத்தை காட்டாமல் இப்படி தைரியமாக அடுத்த வீட்டு பெண்களை இழிவுபடுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.