ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தில் கீழுள்ள பிரதேச சபையின் பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தொடங்கொட பிரதேச சபையின் முதல் வரவுசெலவுத் திட்ட முன்மொழிவு வியாழக்கிழமை (13) தோற்கடிக்கப்பட்டது.
வரவு- செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன.