வடக்கில் போதைப்பொருள் வியாபார பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார், தமிழ் அரசியல்வாதிகள் இணைவு – அமைச்சர் சந்திரசேகர்

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனூடான பிரச்சினையின் பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் இருப்பதாக கூறுவதில் உண்மை இருக்கின்றது. இது மாபியாக்களுடன் தொடர்புபட்டுள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைந்துள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தமிழ் மக்களுக்கு கார்த்திகை மாதம் என்பது முக்கியமான மாதம். இந்த மாதம் மாவீரர்களை நினைவு கூரும் மாதமாகும். அதுமட்டுமன்றி வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது பிள்ளைகளை நினைவு கூரும் மாதம். இந்த மாதத்தில் இருந்துகொண்டு நாங்கள் திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. அதாவது பல தசாப்தங்களுக்கு முன்பிருந்து இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று, தமிழ் மக்களுக்கு எதனையாவது செய்ய வேண்டும் என போராடிய மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? அவர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் ஆசைகள் மற்றும் அபிலாசைகள் என்ன என்பதனை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அங்குள்ள மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும். இந்த வாழ்க்கையை ஏற்படுத்துவதற்காக அவர்கள் போராடியிருந்தால் இன்று அந்த இளைஞர்களின் கனவினை நனவாக்கும் செயற்பாடுகளை எந்தவொரு தமிழ் கட்சியாவது எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாவது அன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் செய்த அர்ப்பணிப்பு தியாகங்களை செய்கின்றார்களா? என்பது கேள்விக்குரிய விடயம் .

அதுமாத்திரமன்றி வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் மக்கள் தொகை குறைந்துகொண்டு வருகின்றது. வறுமை கூடிய மாகாணமாக வடக்கு மற்றும் கிழக்கு காணப்படுகிறது. இன்று தேசிய உற்பத்திக்கு குறைந்த பங்களிப்பு செய்கின்ற மாகாணங்களாகவும் உள்ளன. இதன்மூலம் இந்த மாகாணங்களுக்கு கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த பிரச்சினைகள் தொடர்பில் இந்த மாகாணங்களை கண்டுகொள்ளவில்லை. உரிய தீர்வுகளையும் வழங்கவில்லை. அதன் விளைவாகவே வடக்கில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 1981ஆம் ஆண்டில் 8இலட்சத்து 30ஆயிரம் மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால்தற்போது 6 இலட்சத்து 10 ஆயிரம் மக்களே வாழ்கின்றனர். அப்போது 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த மாவட்டம் இப்போது 6 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாவட்டமாக இருக்கின்றது. வருகின்ற வருடங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் குறையுமா என்றும் தெரியாது. இதனால் எமது அரசியல் இருப்பும் கேள்விக்குரியதாகியுள்ளது. எம்.பிக்களை தெரிவு செய்வதற்கான மக்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமைக்கான காரணத்தை கண்டறிந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் வேகமாக நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதனால் தமிழ் மக்களின் குடிப்பரம்பல் மேலும் குறைவடைகின்றது. கல்வியில் முன்னேறியிருந்த சமூகம் இப்போது கடந்த வருடங்களாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஆனால் கடந்த 6 மாதங்களாக அதில் முன்னேற்றம் காண்பதற்கான நம்பிக்கை உருவாகியுள்ளது. இது எங்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையாகவே இருக்கின்றது.

போதைப்பொருள் மாபியாக்கள் வடக்கை ஆளுகின்றனர். அது வடக்கை அச்சப்படுத்துகின்றது. இதில் இருந்து வடக்கை மீட்க வேண்டும். கடந்த காலங்களில் சஜித் அணியினரை சார்ந்தவர்கள் 78ஆம் ஆண்டில் இருந்து அவ்வாறான நாசகர வேலை மாபியாக்களை உருவாக்கியுள்ளனர் என்றார்.

இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

கடந்த 7 மாதங்களாக கல்வியில் வடக்கு முன்னேற்றம் காண்பதாக கூறியுள்ளீர்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு கூறுகின்றீர்கள் ?. அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவமே போதைப் பொருளுக்கு பிரதான காரணம். இதனால் எப்போது இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றப் போகின்றீர்கள் எனக்கேள்விகளை எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளைகளை கல்வி கற்பதற்காக கொழும்புக்கு அனுப்பும் நிலைமை காணப்பட்டது. அத்துடன் போதைப் பொருள் அச்சுறுத்தல் காரணமாக அதிகளவான பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. யதார்த்தமே இது. யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

இதேவேளை போதைப் பொருள் பிரச்சினைக்கு பின்னால் இராணுவம் மற்றும் பொலிஸ் இருப்பதாக கூறினீர்கள். அதில் உண்மை இருக்கின்றது. இராணுவமும் பொலிஸும் வேறு அல்ல. இது மாபியாக்களுடன் இணைந்துள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் பிணைந்துள்ளனர். அந்த அரசியல்வாதிகள் அண்மையில் கைது செய்யப்பட்டும் உள்ளனர் என்றார்.

இவ்வேளையில் மீண்டும் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போதைப் பொருளுடன் இராணுவம் பொலிஸ் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் ஏற்றுக்கொண்டுள்ளமையை நான் வரவேற்கின்றேன். இதற்கு முன்னரான அரசாங்கங்கள் இதனை கூறியதில்லை. நீங்கள் இராணுவத்தை பொறுப்புக்கூற வைக்காமல் இந்த மாபியாக்களை இல்லாமல் செய்யப் போவதில்லை. வடக்கில் இரண்டு பிரஜைகளுக்கு ஒரு இராணுவ சிப்பாய் இருக்கும் நிலைமையே இருக்கின்றது என்றார்.

இதேவேளை தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர் இந்த விடயத்தில் ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதோ, பொலிஸார் மீதோ பழிகூற முடியாது. ஒரு சிலரின் செயற்பாடுகள் உள்ளன. உங்களுடைய நண்பர்களின் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் இந்த மாபியாக்களுடன் பின்னால் இருக்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.

aaa

மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும்

September 13, 2026

பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு

wat

வறட்சியான வானிலை – 43,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

September 13, 2026

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

photo-collage.png

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி!

September 13, 2026

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

image-483-edited (1)

“தனித்துப் போட்டியிட்டாலும் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்; ஆட்சிக்கு பாதிப்பில்லை!” – பெ. சண்முகம் விளக்கம்

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்துக் களமிறங்கினாலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து

dailythanthi_2026-09-13_zjqobfer_State-01

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவு: ஆளுநர் அர்லேகருடன் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சந்திப்பு!

September 13, 2026

சென்னை: 17-வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்

dailythanthi_2026-08-25_1ha14b7k_CHENNAI-06

“முதலமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!” – நடிகை கஸ்தூரி

September 13, 2026

சென்னை: ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை

26-6aa6392b9a6cd

அமைச்சர் நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சை பேச்சு: திமுக எம்.பி. ஆ. ராசா மீது தவெக காவல் துறையில் புகார்!

September 13, 2026

சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. ராசா

thara

5 முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ளது!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் களம்

1200-675-27028368-thumbnail-16x9-veerapandiyan

இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் இடதுசாரிகள்: தவெக ஆதரவுக் கோரிக்கையை நிராகரித்தது சிபிஐ!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், எந்தக் கூட்டணியிலும் இடம்பெறாமல் இடதுசாரி கட்சிகள் (CPI & CPM)

page

இடைத்தேர்தல் களம்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்