தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு; தொழில் அமைச்சில் கலந்துரையாடல்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்க இருக்கும் 200 ரூபாய் கொடுப்பனவு குறித்தும் கம்பனிகள் வழங்க இருக்கும் 200 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் தொழில் அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட பல தொழிற்சங்க அமைப்புகள் கலந்துக் கொண்டன.

இதன் போது இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்,2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் அதிகரிக்க போவதாக கூறிய 200 ரூபாய் கொடுப்பனவும், கம்பனிகள் அதிகரிக்க போவதாக கூறிய 200 ரூபாய் சம்பள உயர்வும் வரவேற்கதக்கது என்று கூறினார்.

தற்போது தோட்ட தொழிலாளர்கள் மேற்கொள்ளும் வேலைக்கான அளவீடுக்கு தான் சம்பள அதிகரிப்பு இருக்க வேண்டுமே தவிர, கூடுதல் அளவீடுகளுக்கு சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். கம்பனிகள் புதிய சம்பளத்திற்கான வேலைக்கான அளவீடுகளை அதிகரிக்குமானால் அதற்கு இ.தொ.கா ஒரு போதும் சம்மதிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

தோட்ட பகுதிகளில் கொழுந்து நிறை பார்க்கும் பொழுது ஒரு நிறுவையின் போது 1 கிலோ வெட்டுவதற்கு தான் அனுமதி உள்ளது. ஆனால் அரசாங்கத்தால் வரவு செலவு திட்டம் அறிவித்த பிறகு கம்பனிகள் பல தோட்ட பகுதிகளில் கொழுந்து நிறை பார்க்கும் பொழுது ஒரு நிருவைக்கு 3 முதல் 4 கிலோ வெட்ட ஆரம்பித்து விட்டனர். இதனால் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு மூன்று நிருவையின் போது 9 kg முதல் 12 kg வரை ஒரு தொழிலாளிக்கு கொழுந்து வெட்டப்பட்டு வருகிறது.

பச்சை கொழுந்து விலை இன்று 200 ரூபாய் எனும் பொழுது தோட்ட தொழிலாளர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 1800 முதல் 2400 ரூபா வரை கம்பனிகள் சூறையாடி அதிலிருந்து 200 ரூபாய் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே கொழுந்து நிருவையில் கம்பனிகளால் வெட்டம்படும் நிறையை கம்பனிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என தொழில் அமைச்சில் செந்தில் தொண்டமானால் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சம்பள உயர்வின் போது இவ்வாறான நடவடிக்கையை கம்பனிகள் முன்னெடுத்த நேரத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதனை கடுமையாக எதிர்த்து ஹட்டன் தொழில் திணைக்களத்தில் பல ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்தது. இவ்வாறான சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையை கம்பனி மேற்கொள்ள கூடாது என தொழில் திணைக்களத்தால் எழுத்து மூலமாக கம்பனிக்கு அறிவிக்கப்பட்டது.

மீண்டும் இந்த வேலைத்திட்டத்தை கம்பனிகள் ஆரம்பித்து விட்டனர். எனவே கம்பனியின் இவ்வாறான நடவடிக்கையை தொழில் அமைச்சு உடனடியாக தலையிட்டு நிறுத்த வேண்டும் எனவும், தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தோட்ட பகுதிகளில் கை காசுக்கு வேலை செய்யும் தோட்ட தொழிலாளர்களும், தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களும், காலி, களுத்துறை ஆகிய பகுதிகளில் பாம் மர தோட்டத்தில் வேலை செய்யும் தோட்ட தொழிலாளர்களையும் இதில் உள்ளடக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் செந்தில் தொண்டமான் முன்வைத்தார்.

மேலும் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தில் 400 ரூபா அதிகரிக்க அரசாங்கத்தின் முன்மொழிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவேற்பதாக செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

By  C.G.Prashanthan

court-judge-hammer-gavel-696x398

SJB நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு 1½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

July 28, 2026

2019 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை

758874719_1597010588461601_4345952432120067241_n

காணி விடுவிப்புத் தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி…!

July 28, 2026

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

SAUDHI COURT

சவூதியில் இலங்கையருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை; சமூக ஊடக பதிவு தொடர்பில் தீர்ப்பு

July 28, 2026

சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல

E7OQZHSI4BFLXIQ6AVSVBLR2IE

பெர்லின் பிரைட் (Berlin Pride) நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியல் ஃபியர்டே (Fierté Montreal) பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

July 28, 2026

கடந்த வார இறுதியில் பெர்லின் பிரைட் நிகழ்வில் ஒரு நபர் கொல்லப்பட்டுப் பல காயமடைந்த தாக்குதலைத் தொடர்ந்து, மொன்றியல் ஃபியர்டே

IHRULYUKZJG3VPPAZFZSRKMH2M

சிறுவர்களை காரில் வைத்துக்கொண்டு அதிவேகமாக காரைச் செலுத்திய ஓட்டுநருக்கு வழக்கு பதிவு

July 28, 2026

திங்கட்கிழமை காலை 10 ஆவது வீதியில் (10th Line) மணிக்கு 50 கி.மீ வேகம் அனுமதிக்கப்பட்ட பகுதியில், மணிக்கு 93

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”

photo-collage.png (3)

ஓகஸ்ட் 30; சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் குறித்த விசேட சந்திப்பு

July 28, 2026

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்

sea

அவசர வானிலை எச்சரிக்கை!

July 28, 2026

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது

sa

நாட்டை அரசாங்கம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது…

July 28, 2026

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள்