கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்து பிரித்தானியாவின் நொரிஸ் வென்ற நிலையில், இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த மெர்சிடீஸ் அணியின் கிமி அன்டொனெல்லி இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பின்வரிசையிலிருந்து ஆரம்பித்த நடப்பு போர்மியுலா வண் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
அந்தவகையில் இவ்வாண்டுக்கான சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 390 புள்ளிகளுடன் நொரிஸ் முதலாமிடத்தில் காணப்படுகின்றார். நொரிஸின் சக மக்லரென் அணி ஓட்டுநரான ஒஸ்கார் பியாஸ்திரி 366 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் காணப்படுவதோடு, றெட் புல் அணியின் வெர்ஸ்டப்பன் 341 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் காணப்படுகின்றார்.