இலங்கை இந்திய கடற்தொழிலாளர் மத்தியில் உள்ள பிரச்சினைகளை இரண்டு நாடுகளும் உரியமுறையில் தீர்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு தரப்பும் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க யோசனையை முன்வைத்துள்ளன. எனவே அதன் அடிப்படையில் இணக்கம் ஏற்படுத்தப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாம் கேள்வி எழுப்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் திருச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் அவர் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.