11ஆவது வருடமாக இலங்கை – இந்திய கூட்டு இராணுவப்பயிற்சிகள் இன்று இந்தியாவின் கர்நாடகாவில் ஆரம்பமாகின.
மித்ரா சக்தி என்ற பெயர் கொண்ட இந்த கூட்டு இராணுவப்பயிற்சிகள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளன.
தீவிரவாத எதிர்ப்பு, ட்ரோன் பயிற்சிகள் உட்பட்ட பல்வேறு பயிற்சிகள் இதன்போது இரண்டு நாட்டு படையினருக்கு மத்தியில் பகிர்ந்து கொள்ளப்படும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.