ஹொங்கொங் சிக்சஸ் கோப்பை போட்டி; ஹொங்கொங் சைனா சம்பியன்

ஹொங்கொங் சிக்சஸ் கோப்பைப் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடிய ஹொங்கொங் சைனா கடைசிப் பந்தில் ஒரு விக்கெட்டால் பரபரப்பான வெற்றியை ஈட்டி சம்பியனானது.

அப் போட்டியில் பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடி 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது.

ஜிஷான் அலாம் 51 ஓட்டங்களையும் அபு ஹைதர் 28 ஓட்டங்களையும் ஜிஷான் அலாம் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நஸ்ருல்லா ரானா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

121 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் சைனா 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

அய்ஸாஸ் கான் 15 பந்துகளில் 4 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது போட்டி விதிகள் பிரகாரம் 4ஆவது ஓவரில் ஓய்வுபெற்றார். (73 – 2 விக்.)

ஐந்தாவது ஓவரின் கடைசிப் பந்தில் அபு ஹதர் ஒரு ஓட்டத்துடன் சுயமாக ஆட்டம் இழப்பதாக அறிவித்தார். அப்போது ஹொங்கொங் சைனாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

5 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால் ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த அய்ஸாஸ் கானுக்கு போட்டி விதிகள் பிரகாரம் மீண்டும் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு கிடைத்தது.

கடைசி ஓவரை எதிர்கொண்ட அவர், 5 சிக்ஸ்களை விளாசி ஹொங்கொங் அணிக்கு மகத்தான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். அந்த ஓவரில் 2 வைட்கள் பதிவாகியதுடன் ஒரு பந்து டொட் போல் ஆனது.

அய்ஸாஸ் கான் 21 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 11 சிக்ஸ்கள் உட்பட 85 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். நிஸாகத் கான் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் அபு ஹைதர் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: அய்ஸாஸ் கான்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி

55

இலங்கை சுற்றுலாத் துறையில் மைல்கல்: இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கைக் கடந்தது

November 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை இலக்கை மீறி, இலங்கை சுற்றுலாத் துறை இன்று (17)

2

உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம்!

November 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17)

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.