போதைப்பொருள் கடத்தல் மோசடியில் ஈடுபட்ட “ஹோரி சுத்தா” என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் இன்று (09) மதியம் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிவு புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரிடம் 10 கிராம் மற்றும் 650 மில்லிகிராம் ஐஸ் மற்றும் இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபருக்கு போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுக்காக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட மூன்று திறந்த பிடியாணை உத்தரவும் உள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சந்தேகநபருக்கு டுபாயில் உள்ள ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிரிபத்கொட பொலிஸ் பகுதியில் வசிக்கும் முப்பது வயதுடையவர்.
மஹர நீதவான் நீதிமன்றத்திடம் போதைப்பொருள் தொடர்பாக சந்தேகநபரை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.