19 உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் வேதருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ ரத்னபால உபாலி தேரர் மற்றும் பஹமுனே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம் | New Archaeological Advisory Committee Appointed
இந்தக் குழுவானது 2025 மார்ச் 10 ஆம் திகதி முதல் 2027 மார்ச் 9 ஆம் திகதி வரை இரண்டு ஆண்டுகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.