இந்த ஆண்டு ஆரம்பமே தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது மதகஜராஜா படம். பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு இருந்த இப்படம், போராட்டங்களுக்கு பின் ரிலீஸ் ஆனது.
ஜனவரி மாதம் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து மாபெரும் வெற்றியடைந்தது. இந்த ஆண்டு எப்படி மத கஜ ராஜா படம் பல வருடங்கள் கழித்து வெளிவந்து ஹிட்டானது.
அதை போல் அடுத்த ஆண்டும் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் பார்ட்டி படம் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், சிவா, ரெஜினா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் பார்ட்டி.
இப்படம் பல வருடங்களாக கிடப்பில் உள்ளது. எப்போது வெளிவரும் என ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், 2026ல் பிப்ரவரி மாதம் இப்படத்தை வெளியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.