உள்ளூர் துணி உற்பத்திகள் பெறுமதிசேர் வரிக்கு உட்படுவதுடன், இறக்குமதி செய்யப்படுகின்ற துணிகள் பெறுமதிசேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள போதிலும், கிலோ கிராமிற்கு 100 ரூபா செஸ் வரி அறவிடப்படுகின்றது.
சமமான போட்டிமிகு நிலையை உறுதிப்படுத்துவதற்கு இறக்குமதி செய்யப்படும் துணி மீதான செஸ் வரியை நீக்குவதற்கும் அதற்குப் பதிலாக பெறுமதி சேர் வரியை விதிப்பதற்கும் முன்மொழியப்படுகின்றது. இது 2026 ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் முன்மொழியப்படுன்றது.