கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க (CAVA) 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் நேபாளத்திடம் இலங்கை தோல்வி அடைந்தது.
நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற போட்டியில் 1 – 3 என்ற செட்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வியைத் தழுவியது.
முதல் இரண்டு செட்களில் 18 – 25, 24 – 26 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்திடம் தோல்வி அடைந்த இலங்கை, 3ஆவது செட்டில் திறமையாக விளையாடி 25 – 19 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆனால், 4ஆவது செட்டில் அநாவசியமாக தவறுகளை இழைத்ததால் இலங்கை 20 – 25 என தோல்வி அடைந்தது.
இப் போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற கிர்கிஸ்தானுக்கும் மாலைதீவுகளுக்கும் இடையிலான போட்டியில் கிர்கிஸ்தான் மிக இலகுவாக 3 நேர் செட்களில் (25 – 21, 25 – 9, 25 – 21) வெற்றிபெற்றது.