குட் பேட் அக்லி படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து உடனடியாக அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் காம்போ இணைந்துள்ளது. இவர்களுடைய ‘ஏகே 64’ படத்துக்கான முதற்கட்ட பணிகள் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. அதோடு இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிலரிடம்
அஜித்தின் 64வது படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் உள்ளனர். இதனிடையில் கார் ரேஸிங்கில் பிசியாக இருக்கும் அஜித், அவ்வப்போது கொடுத்து வரும் பேட்டிகள் இணையத்தில் டிரெண்டிங்கில் கலக்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘ஏகே 64’ படத்தில் பிரபல நடிகர்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘அஜித் 64’ பற்றி இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், அவ்வப்போது இப்படம் சம்பந்தமான செய்திகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக விஜய் சேதுபதி , ராகவா லாரன்ஸ் இருவரையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.