விண்வெளி ஆய்வில் அனைவருக்கும் ஆர்வம் உண்டு. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி ஆய்வு குறித்து அறிந்துகொள்வதில் அதீத ஆர்வம் இருக்கும். அந்த வகையில், இந்தாண்டு ரஷ்யாவில் நடைபெற்ற விண்வெளி முகாமிற்கு தமிழ்நாட்டில் இருந்து மாணவி தேர்வாகி, 5 நாள் பயிற்சியை முடித்து சென்னை வந்தடைந்தார்.
விண்வெளி ஆய்வில் இந்தியா கால் பதித்து சாதனைகளைப் புரிந்து வருகிறது. விண்வெளி அறிவியலில் மாணவர்கள் திறன்களை வளர்த்துகொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், கருத்தரங்களும் நடத்தப்படுகிறது. விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்பில் முன்னிலையில் இருக்கும் ரஷ்யாவிற்கு சென்று அதனை அறிந்துகொள்ள மாணவர்கள் ஆர்வம் காட்டுக்கிறார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து 18 வயது மாணவி ரஷ்யாவில் நடைபெற்ற விண்வெளி பயிற்சி முகாமில் கலந்துகொண்டு, விண்வெளி வீரர்கள் பயிற்சி மையம் மற்றும் செயற்கைக்கோள் உற்பத்தி மையம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார்.