உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்நதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “இலங்கையில் யார் அமைச்சர்களாக இருக்கின்றார்கள் என்பது எங்களுக்கே தெரியாத நிலையில் அவர்களுக்கான அச்சுறுதல் என்பது இருப்பதற்கான வாய்ப்பில்லை.
யார் அமைச்சர்களாக உள்ளார்கள் என்பதை அவர்கள் எழுதி ஒட்டிக்கொண்டே இனிவரும் காலங்களில் வரவேண்டும். இல்லாது விட்டால் யார் அமைச்சர்கள் என்பதை தெரியாத நிலையே உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.