திருகோணமலை சீனக்குடா துறைமுகத்தில் இருந்து, மன்னாருக்கு காற்றாலை விசையாழியை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. சீனக்குடா துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே இந்தப் பாரஊர்தி கவிழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இதன் காரணமாக, துறைமுக வளாகத்திற்குள் அமைந்துள்ள விகாரை ஒன்றும் மற்றும் கொள்கலன் கட்டிடம் ஒன்றும் பலத்த சேதத்துக்கு உள்ளானதோடு, சாரதி மற்றும் ஒருவரும் சிறு காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.