அஜித்தின் AK64 படத்தின் அறிவிப்பில் ஒரு குழப்பம் ஏற்பட்டதாக தெரிகின்றது. AK64 அறிவிப்பு இம்மாதம் வெளியாகுமா ? அல்லது அஜித் சொன்னபடி ஜனவரி மாதம் தான் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகுமா? என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்,
அஜித் குமார் நடிப்பில் தயாராகவுள்ள AK64 திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் ரெடியாக இருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது. ஆனால் அந்த டைட்டில் போஸ்டர் எப்போது வெளியாகும் என்பது தான் அனைவரது கேள்வியாகவும் இருக்கின்றது. இம்மாதமே AK64 அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்பட்டது. அதுவும் AK64 திரைப்படத்தின் அறிவிப்பு டைட்டில் போஸ்டருடன் வெளியாகும் என்ற தகவல் அஜித் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது.
ஆனால் சமீபத்தில் அஜித் கொடுத்த பேட்டியில் அவர், AK64 திரைப்படத்தின் அறிவிப்பு ஜனவரி மாதம் தான் வரும் என கூறிவிட்டார். இது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது. ஆனால் தற்போது முன்பு சொன்னபடியே AK64 படத்தின் டைட்டில் போஸ்டர் இம்மாதமே வெளியாகும் என தகவல்கள் வருகின்றன.