சிம்புவின் அரசன் ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாம். அதே போல தனுஷ் -விக்னேஷ் ராஜா கூட்டணியில் தயாராகும் D54 திரைப்படமும் அதே ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தனுஷ் மற்றும் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா காம்போவில் தயராகும் படம் தான் D54. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டது. இன்னும் பேட்ச் ஒர்க் மட்டும் மீதமுள்ளதாம்.அதை முடித்துவிட்டால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடுமாம். இதைத்தொடர்ந்து இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியிடலாம் என படக்குழு முடிவெடுத்திருந்தனர். ஆனால் தற்போது இந்த ரிலீஸ் முடிவில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.
ஒருவேளை D54 ஏப்ரல் மாதம் வெளியானால் சிம்புவின் அரசன் படத்துடன் தனுஷ் படம் மோதும் வாய்ப்பு அமையும். சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகிவரும் அரசன் திரைப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு முடிவெடுத்திருக்கின்றது. அநேகமாக ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசன் படத்தை வெளியிடும் முடிவில் படக்குழு இருப்பதாக தெரிகின்றது. அதே ஏப்ரல் 14 ஆம் தேதி தனுஷின் D54 படமும் வெளியானால் தனுஷ் vs சிம்பு படங்கள் நேரடியா மோதும் வாய்ப்பு அமையும்.
ஒருவேளை கருப்புஜனவரி மாதமே வெளியானால் கண்டிப்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி அரசன் மற்றும் D54 என இரு படங்களும் வெளியாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். முன்பெல்லாம் தீபாவளி ,பொங்கல் பண்டிகையை போல ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டும் பல முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகும்.