யாழ்ப்பாணம் தாவடியை தாயகமாகக் கொண்ட நடிகர் ஜெய் ஆகாஷின் புதிய திரைப்படமொன்றின் பூஜை கனடாவில் நடைபெறவுள்ளது.
மேற்படி திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கனடா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெறவுள்ளதுடன் அந்ததந்த நாடுகளில் திரையிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
‘சூரியபிரகாஷ்” என பெயரிப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தின் பூஜை கனடாவில் எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை கனடா கந்தசாமி கோயிலில் நடைபெறவுள்ளது.
தென்னிந்தியாவில் சி-தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நீ தானே எந்தன் பொன்வசந்தம் என்னும் தொலைக்காட்சித் தொடரே ‘சூரியபிரகாஷ்” என்னும் பெயரின் திரைப்படமாக தயாரிக்கப்படவுள்ளது.
ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் தயாரிக்கும் மேற்படி ‘சூரியபிரகாஷ்” திரைப்படததை சென்ற் ராம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றது.
இணை இயக்குநராக முகுந்தன் தங்கவேல், ஒளிப்பதிவாளராக வி.ஜீவராஜ், இசையமைப்பாளராக விஜய் பிரபு, எடிட்டராக ஏ.சி மணிகண்டன் ஆகியோர் பணியாற்றவுள்ளார்கள்.
5 ஆம் திகதி புதன்கிழமை கனடா கந்தசாமி கோயிலில் நடைபெறவுள்ள படத்தினுடைய பூஜையைத் தொடர்ந்து அதே நாளிலேயே படப்பிடிப்புகளும் ஆரம்பமாகவுள்ளன.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் ஈழத்து மண்ணின் மைந்தன், தாவடி மைந்தன் நடிகர் ஜெய் ஆகாஷ் ரோஜாவனம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் காலடி எடுத்துவைத்தவர்.
அதனைத் தொடந்து ரோஜாக் கூட்டம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.செவ்வேள், இயக்குனர் அகத்தியன் இயக்கிய ராமகிருஷ்ணா, இயக்குனர் எழில் இயக்கிய அமுதே, காற்றுள்ளவரை போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.
தமிழில் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, இந்தி திரைப்படங்கள் பலவற்றிலும் இவர் நடித்துள்ளார்.
நடிகர் ஜெய் ஆகாஷ் சி-தமிழ் தொலைக்காட்சியில் நீதானே எந்தன் பொன்வசந்தம், நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற தொடர்களில் நடித்து சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஜெய் ஆகாஷ்ஷின் இந்த புதிய ஆரம்பத்திற்க்கு Behind Me சார்பாக எங்கள் வாழ்த்துக்கள்.