வட மாகாணத்தில் உயிர்கொல்லியான போதைப்பொருளை அடியோடு ஒழிக்க வேண்டும்!

முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு எதிராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை நாமும் சரிவரப் பயன்படுத்தி எமது வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளை அடியோடு ஒழிக்க வேண்டும். இளைய சமூகத்தை அதிலிருந்து பாதுகாப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

மக்களை நோக்கிய நிர்வாகம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்திப்பு, ‘அபிவிருத்தி நோக்கிய பயணம் – புங்குடுதீவு 2025’ என்னும் தொனிப்பொருளில் புங்குடுதீவு வடஇலங்கை சர்வதோய மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் புங்குடுதீவு மக்களால் பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன. வீதித் திருத்தங்கள், கடற்போக்குவரத்து, இறங்குதுறை புனரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களங்களுக்குச் சொந்தமான வீதிகளின் புனரமைப்புத் தொடர்பில் தொடர்புடைய அதிகாரிகள் பதிலளித்தனர்.

உள்ளூர் வீதிகள் குறிப்பாக பிரதேச சபைக்குச் சொந்தமான 139 வீதிகளில் முன்னுரிமை அடிப்படையில் 10 வீதிகள் திருத்தத்துக்கான முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு இவற்றை புனரமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. குடிநீர் விநியோகக் குழாய்கள் பொருத்தப்பட்டும் குடிநீர் வழங்கப்படாமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

மருத்துவமனையின் தேவைகள், வங்கிச் சேவைகளின் மேலதிக தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

குறிப்பாக கல்வி தொடர்பில் மிக நீண்ட நேரம் ஆராயப்பட்டது. பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

குறிப்பாக எதிர்காலத்தில் பாடசாலைகளை கொத்தணிகளாக்கி ஆளணிகளைப் பங்கிடுவதன் சாதக பாதகங்கள் தொடர்பிலும் நேற்றைய கலந்துரையாடலில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மாணவர்கள் பாடசாலை நேரங்களில் விளையாட்டுக்களில் ஈடுபடுவது, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போது பதிலளித்த ஆளுநர், ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதை ஒழிப்பு நடவடிக்கை ஊடாக எமது வடக்கு மாகாணத்தில் இதனைக் கட்டுப்படுத்தலாம் என்று குறிப்பிட்டதுடன் பொலிஸாரின் செயற்பாடுகளிலும் மிகப் பெரிய மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்த மக்கள் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலர், பிரதேச சபையின் உப தவிசாளர், பிரதேச சபைச் செயலர், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ba

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

November 18, 2025

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட 50 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி காணியை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாகக் கூறப்படும்

aru

சுமந்திரன் சீற்றம்; அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும்

November 18, 2025

அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக்

pu)Nama

புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் – நாமல்

November 18, 2025

திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட

wat

மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்

November 17, 2025

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன

mu

சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

November 17, 2025

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும்

jup

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்?

November 17, 2025

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை

sine

தொழில்முறை டென்னிஸ் சம்பியனான சின்னர்

November 17, 2025

தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பின் இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (16)

pri

18வது ஆண்டாக மீண்டும் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக்!

November 17, 2025

தொடர்ச்சியாக 18வது ஆண்டாக, சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிரிமா குழுமம் இலங்கை) நிறுவனம், பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை

nl

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை புதிய விற்பனை நிலையங்களை திறப்பு

November 17, 2025

நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்