“செம்மணி உடனிருப்பு வேண்டுதல்” என்ற தொனிப்பொருளில் தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி, தேசிய கிறிஸ்தவமன்ற ஆயர் பேரவையினரால் இன்றைய தினம் வியாழக்கிழமை (30) யாழ்ப்பாணம் வளைவுக்கு அருகில், அணையா தீபம் சுற்றுவட்டப் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த அடையாளப் போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களின் மறைமாவட்ட ஆயர்கள், அருட்சகோதரர்கள் என பல கத்தோலிக்க பிரமுகர்கள் பங்கெடுத்தனர்.
முன்னதாக அணையா தீப தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையினர் அங்கிருந்து ஊர்வலமாக, மனித புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயான நுழைவாயிலுக்கு சென்று அங்கும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.