கடலில் காற்றாலை, சூரியசக்தி மின் திட்டங்களை செயல்படுத்த தேவைப்படும் மிதக்கும் தளங்கள் அமைப்பதற்கான, கட்டுமான தொழில்நுட்பத்தை, சென்னையில் செயல்படும், மத்திய அரசின் எஸ்.இ.ஆர்.சி., எனப்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் உருவாக்கி உள்ளது.
உலகம் முழுதும், சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மத்திய அரசு முடிவு நம் நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய அந்த வகை மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துமாறு, மாநில மின் வாரியங்கள், தனியார் நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
நிலத்தில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் கடலில் காற்றாலை மின் நிலையங்கள் இருப்பது போல் இந்தியாவிலும் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சாதகமான சூழல், தமிழகம் மற்றும் குஜராத்தில் உள்ளது. இரு மாநிலங்களிலும் தனியார் நிறுவனங்கள், அந்த திட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.