யாழ்ப்பாணம், சுன்னாகம் ஆறுமுகம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்த வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த நடராஜா சந்திரா (வயது-70) என்பவராவார்.
சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று திங்கள் கிழமை (27) மாலை சம்பவ இடத்துக்கு சென்ற யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.