2025 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. படை பங்களிப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாடு ஒக்டோபர் 14 முதல் 16 ஆம் திகதி வரை இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்றது.
இந்திய இராணுவத்தின் அனுசரணையில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ பங்குபற்றியிருந்தார்.
32 படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட இராணுவத் தளபதிகள் இந்த மாநாட்டில் பங்குபற்றியிருந்தார்.
இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.