ஸ்ரீலங்கா மகளிர் கிரிக்கெட் அணி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரை நேற்று (23) அலரி மாளிகையில் சந்தித்தது. தற்போது நடைபெற்று வரும் மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடர் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
வீராங்கனைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் தேவைப்படும் வசதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.