வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதியுள்ளார். ஆனால் அவர் யார் என்பது குறித்த அடையாளம் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் களுபோவில மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.