உலக கோப்பை லீக் போட்டியில் ஆஷ்லி கார்ட்னர் சதம் கடந்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இந்தூரில உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறின. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 244 ரன் எடுத்தது. சோபி எக்லெஸ்டோன் (10), லாரன் பெல் (2) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அனாபெல் சுதர்லாந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய அணி 40.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 248 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கார்ட்னர் (104), அனாபெல் (98 அவுட்டாகாமல் இருந்தனர். இதுவரை விளையாடிய 6 போட்டியில், 5ல் வென்ற ஆஸ்திரேலியா 11 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.