இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் 10,000 மீற்றர் நிகழ்வில் நுவரெலியா அக்கரபத்தனை புதிய பிரஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் ரொஷான் பங்கேற்கவுள்ளார்.
அகில இலங்கை தடகளப் போட்டியில் 10,000 மீற்றர் தூரத்தை 30 நிமிடங்கள் 55 செக்கன்களில் நிறைவு செய்து முதலாமிடத்தை றொஷான் பெற்றிருந்தார். நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகும் நிகழ்வுக்காக நேற்று இந்தியாவுக்கு பயணமாகியிருந்தார்.