யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கு அனுமதி வழங்கிய பின்னர் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய காரியாலயம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அப்பகுதியை சேர்ந்த மாணவன் தரம் எட்டில் கல்வி பயில்வதற்கு விண்ணப்பித்துள்ளான்.
பாடசாலை,மாணவனுக்கு அனுமதி வழங்கிய நிலையில் வலயக் கல்வி பணிமனையினால் பெயர் வெளியிடப்பட்ட பின்னர் குறித்த மாணவனுக்கு பாடசாலை அனுமதியை பின்னர் மறுத்துள்ளது.
இதன் காரணமாக குறித்த மாணவன் ஏற்கனவே கல்வி கற்ற பாடசாலையில் விடுகை பாத்திரத்தை பெற்ற நிலையில், முன்னர் கற்ற பாடசாலைக்கு செல்ல முடியாமல், புதிய பாடசாலையில் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது