சீனாவின் ஹாங்சோவிலிருந்து தென் கொரியாவின் சியோலுக்கு நேற்று (18) புறப்பட்ட எயார் சீனா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.
இவ்விபத்து விமானத்தின் கைபைகள் வைக்கும் கேபினில் ஏற்பட்டுள்ளது. பயணி ஒருவரின் பையில் இருந்த லித்தியம் பேட்டரியால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடனே விமானம், ஷாங்காயில் உள்ள புடாங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.