அரியாலை குப்பை மேடு – சுயலாப அரசியலின்பால் மக்கள் மத்தியில் பரப்பப்படும் செய்திகளாகும்

நல்லூர் பிரதேச சபை காரைமுனங்கு கழிவுமுகாமைத்துவ மையத்தினை குப்பைகளைக் கொட்டி அதனை குப்பை மோடாக மாற்றுகின்ற செயற்பாட்டினை ஒருபோதும் செய்யவுமில்லை செய்யப்போவதுமில்லை என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரியாலை பகுதியில் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகளை சேமிக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கடந்த புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த நிலையம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் ஊடகங்களுக்கு தவிசாளர் அனுப்பியுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் ,

அரியாலை பிரதேச வாழ் மக்களால் குறித்த கழிவு முகாமைத்துவ நிலையம் அமைப்பதற்கு எதிராக நடாத்தப்படும் அமைதிப்போராட்டங்களுக்கு நல்லூர் பிரதேச சபை மதிப்பளிக்கின்ற அதேவேளை மக்களின் மத்தியில் தவறாக சித்தரிக்கப்பட்ட விடயங்களை மக்களுக்கு தெளிவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பிரதேச சபைக்குண்டு

நல்லூர் பிரதேச சபை தன்னுடைய கழிவற்கறல் முகாமைத்துவத்தினை இன்றுவரை சிறப்பாக செய்து வருகின்றது. குறித்த கழிவகற்றல் செயற்பாட்டின் வினைத்திறனை அதிகரிக்கும் வகையில் மற்றொரு மைல்கல்லாக இவ் கழிவகற்றல் முகாமைத்தவ நிலையத்தினை அமைப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த செயற்பாடுகளின் முதற்கட்டமாக பொருத்தமான ஒரு இடம் எமது பிரதேச சபையின் நியாயதிக்கத்தினுள் தெரிவு செய்து தருமாறு கோரப்பட்டதற்கு அமைவாக நல்லூர் பிரதேச செயலகத்தினால் முறையாக குறித்த திட்டத்திற்கு காணி ஒதுக்கப்பட்டது.

 குறித்த காணியில் குறித்த கழிவு முகாமைத்தவ செயற்பாடுகளினால் ஏதாவது சூழல் மாசடையும் நிலை ஏற்படுமா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக குறித்த செயற்றிட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் பிரஸ்தாபிக்கப்பட்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியும் பெறப்பட்டு அதன் பின்னரே பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த கழிவு முகாமைத்துவ நிலையம் என்பது ஒரு கழிவுசேகரிக்கும் குப்பைமேடாக உருவாக்கப்பட கூடாது என்ற தூரநோக்கு சிந்தனையினை அடிப்படையாகக் கொண்டே இச் செயற்றிட்டம் பிரதேச சபையினால் ஆரம்பிக்கப்பட்டது.

இங்கு இடம் பெறும் செயல்முறையானது பிரதேச வாழ் மக்களிடம் சேகரிக்கப்படும் கழிவுகளில் உக்கக்கூடிய மற்றும் உணவுப்பொருட்கள் சார்ந்த கழிவுகளைத் தவிர்த்து சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்ரிக் பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகளைச் சேகரித்து அவற்றினைத் தரம்பிரித்து மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கொள்கைகளுக்கு அமைவாக உரிய பொறிமுறைகள் வாயிலாக குறித்த கழிவு முகாமைத்துவ நிலையதிலிருந்து நாளாந்தம் அகற்றுவதே இங்கு இடம்பெறப்போகின்ற பொறிமுறையாகும்.

இக் கழிவுமுகாமைத்துவ நிலையத்தில் எந்த ஒரு காலப்பகுதியிலும் பெறப்படுகின்ற கழிவுப்பொருட்கள் தொடர்ச்சியாக சேமித்து வைப்படமாட்டாது. குறித்த விடயம் மக்கள் மத்தியில் சரியாக சென்றடையுமானால் எந்தவொரு போராட்டத்தினையும் மக்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது.

இருப்பினும் தமது சொந்த அற்ப இலபங்களுக்காக சில சமூக எதிர்ப்பாளர்கள் மக்களையும் மக்களுக்காக செயற்படும் பொது அமைப்புக்களையும் சமூகத்தின் கண்ணாடியாக செயற்படும் ஊடகங்களையும் தவறாக வழிநடாத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த விடயத்திற்காக கழிவகற்றல் முகாமைத்துவ மையத்தினை ஒரு குப்பை மேடு உருவாக்கப்படுவதாக கருத்துருவாக்கம் செய்து அதனடிப்படையில் பல்வேறு வதந்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

குறித்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானதும் சுயலாப அரசியலின்பால் மக்கள் மத்தியில் பரப்பப்படும் செய்திகளாகும் என்ற விடயத்தினை மக்கள் புரிந்து கொள்ள வேணடுமென நல்லூர் பிரதேச சபை மக்களிடம் இத்தால் கோருகின்றது.

நல்லூர் பிரதேச சபை காரைமுனங்கு கழிவுமுகாமைத்துவ மையத்தினை குப்பைகளைக் கொட்டி அதனை குப்பை மோடாக மாற்றுகின்ற செயற்பாட்டினை ஒருபோதும் செய்யவுமில்லை செய்யப்போவதுமில்லை.

மேலும் மக்களின் தெளிவுபடுத்தலுக்காக குறித்த இத்திட்டத்தின் இரண்டாம்கட்ட நடவடிக்கையாக இவ் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் சேகரிக்கப்படும் அனைத்து பிளாஸ்ரிக், பொலித்தீன் , கண்ணாடி, கழிவுகள் ஒரு இவ்வாறன கழிவுகளை பாரியளவில் மீள்சுழற்சி செய்கின்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகளும் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது.

குறித்த இச் செயற்றிட்டத்தின் மூன்றாவது கட்டடமாக மேலைத்தேசய நாடுகளில் இவ்வாறான கழிவுப்பொருட்களினை பாரியளவில் மீள்சுழற்சி செய்வதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களைப் போன்ற உரிய அமைச்சுக்களின் ஊடாக கொள்வனவு செய்து இந் நிலையத்தில் பொருத்தி ஒரு நவீன கழிவுமுகாமைத்துவ மையமாக இதனை உருவாக்குவதற்குரிய பணிகளும் தற்போது எம்மால் முன்னடுக்கப்பட தொடங்கியுள்ளது.

மேலும் இக் கழிவுமுகாமைத்துவ நிலையத்தில் முதற்கட்டமாக 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் குறித்த அரியாலை பிரதேசத்திலிருந்தே உள்வாங்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து இயந்திர சாதனங்கள் பொருத்தப்பட பொருத்தப்பட அப்பகுதியிலிருந்து இன்னும் பல இப் பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுவதற்கான பிரேரணையும் இச் செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் அப்பிரதேச கழிவுமுகாமைத்துவ நிலையத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களை வேலைக்கு உள்வாங்கும் போது சூழல்பாதுகாப்பு என்ற விடயத்தில் முனைப்பாக இருக்கும் மக்கள் குறித்த செயற்றிட்டத்தினை சிறப்பாக செயற்படுத்தி அப்பிரதேசத்தினை தூயபிரதேசமாக வைத்திருப்பாளர்கள் என்ற தொலைநோக்குப் பார்வையினாலேயே ஆகும்.

நிலமை இவ்வாறு இருக்கையில் ஊடங்களிலும் மற்றும் நேரடியாகவும் இவ் கழிவுமுகாமைத்துவ மையம் உருவாகுவதற்கு எதிராக கருத்துருவாக்கம் செய்யும் பலர் குறித்த பிரதேசத்தினைச் சாராதவர்களாகவும். பிரதேச சபையின் மீது தமது சொந்த காழ்புணர்வினை வெளிப்படுத்துபவர்களாகவும் காணப்படுவதுடன் தமது சுயலாபத்திற்க்காக இப் பிரச்சினையில் அரியாலை வாழ் மக்களை கேடயமாக்கி கையிலெடுத்துள்ளனர்.

 அதிலும் குறிப்பாக குறித்த கழிவற்றல் நிலையத்தில் மருத்துக் கழிவுகள் கொட்டப்பட்டு அவை எரியூட்டப்படபோகின்றது எனற புனைகதைகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்றது.

பிரதேச சபைச் சட்டத்தின் கீழ் பிரதேச சபைக்குள்ள கழிவகற்றல் பணிகளில் மருத்துவக்கழிவுகளை சேகரிக்கும் பணி பிரதேச சபைக்கு இல்லை என்ற அடிப்படையான விடயத்தினையே மக்கள் மத்தியில் மறைத்து மக்களுக்கும் பிரதேச சபைக்கும் இடையிலான நெருக்கமான உறவில் விரிசலினை ஏற்படுத்த பலர் முயற்சிக்கின்ற விடயத்தினை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு இவ்வாறான சமூக விரோத சக்திகளை தம்மிலிருலுந்து வெளியகற்றி உங்களுடைய பிரதேச சபைக்கும் சூழல்பாதுகாப்பிற்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என உங்களின் பணியாளர் என்ற ரீதியில் நல்லூர் பிரதேச சபை இவ் பகீரங்க கோரிக்கையினை முன்வைப்பதுடன் இக் கழிவகற்றல் நிலையம் தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் எதுவித தயக்கமும் மின்றி நேரடியாக பிரதேச சபையினை அணுக்கி தெளிபடுத்தல்களினை பெற்றுக் கொள்ள முடியும்

அத்துடன் குறித்த கழிவுமுகாமைத்துவ மையத்தினை ஊடகவியளார்கள் மற்றும் பொதுமக்கள் நல்லூர் பிரதேச சபையுடன் தொடர்பு கொண்டு எக்காலத்திலும் பார்வையிடமுடியும் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட

wat

மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்

November 17, 2025

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன

mu

சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

November 17, 2025

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும்

jup

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்?

November 17, 2025

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை

sine

தொழில்முறை டென்னிஸ் சம்பியனான சின்னர்

November 17, 2025

தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பின் இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (16)

pri

18வது ஆண்டாக மீண்டும் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக்!

November 17, 2025

தொடர்ச்சியாக 18வது ஆண்டாக, சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிரிமா குழுமம் இலங்கை) நிறுவனம், பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை

nl

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை புதிய விற்பனை நிலையங்களை திறப்பு

November 17, 2025

நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி