அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே ஓவல் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இப்பேச்சுவார்த்தையில் ட்ரம்ப், மார்க் கார்னி ஆகிய இருவரும் உறவை வலுப்படுத்துவது, அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம் மற்றும் இஸ்ரேல்-காஸா மோதல் என பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தனர்.
பின்னர் நிருபர்கள் சந்திப்பில் மார்க் கார்னி கூறுகையில்,
மாற்றத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதி ட்ரம்ப். மத்திய கிழக்கில் அமைதியை நிலை நாட்ட ட்ரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சியை நாங்கள் ஆதரிப்போம். அதற்காக நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம்” என தெரிவித்தார்.
இது தொடர்பில் ட்ரம்ப் கூறுகையில் ,
எங்களுக்கு சில மோதல்கள் இருந்தன. ஆனால் நாங்கள் அதை சரி செய்வோம்.எங்களுக்குள் ஒரு வலுவான உறவு இருந்தது. நாங்கள் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் காஸா மோதல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இவ்வாறு கூறியுள்ளார்.