பிரதமர் மார்க் கார்னி தனது நான்கு நாள் பயணமாக, பெய்ஜிங் சென்றடைந்தார்.
சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, கனடா பிரதமர் ஒருவர் சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் நிலவும் சிக்கல்கள் மற்றும் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் கனடா பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சமாளிப்பதற்காக, மார்க் கார்னி இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.
வரும் 10 ஆண்டுகளில் அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுக்கான ஏற்றுமதியை இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு அவர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமை சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசும் கார்னி, பல புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.