70 ரூபாவாக முட்டை விலை உயரும்?

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும். வெள்ளத்தில் சிக்கி பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 28 இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன. இதனால் வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக உயர்வடையும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக உயரும் அபாயம் உள்ளது. இந்த விலையேற்றத்திற்கான பிரதான காரணம் பண்ணையில் வளர்க்கப்பட்ட பெருமளவான கோழிகள் உயிரிழந்துள்ளன. கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலையால் முழு நாடும் இயற்கை பேரிடருக்கு முகங்கொடுத்துள்ளதுடன் பெரும் வெள்ளம் காரணமாக பண்ணையில் வளர்க்கப்பட்ட சுமார் 28 இலட்சத்துக்கும் அதிக எண்ணிக்கையிலான கோழிகள் உயிரிழந்துள்ளன.

இதனால் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏனைய கால நடை உற்பத்திகளும் இதனால் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. கோழி இறைச்சியின் விலை தற்போது குறைவாக இருப்பினும், எதிர்வரும் பண்டிகை காலத்தின் போது கோழிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும். அத்தோடு இக்காலப்பகுதியில் கோழி இறைச்சியை உணவுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்ற வதந்திகளும் பரவி வருவதைக் காண முடிகிறது. எவ்வாறாயினும் நாம் வெள்ளத்தால் உயிரிழந்த கோழிகளை மனித நுகர்வுக்கு ஒருபோதும் பயன்படுத்துவதில்லை.

அத்தோடு பண்ணை விலங்கு, கால்நடை உற்பத்திக்கு சவாலாக, கால்நடை தீவனத்திற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது. ஆகையால் கால்நடை உற்பத்தியாளர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பதற்கும், சந்தையை நிலைப்படுத்தவும் அரசாங்கம் கால்நடை தீவன மூலப்பொருட்களை உடனடியாக இறக்குமதி செய்வது அவசியம். மேலும் இந்நேரத்தில் பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணை உரிமையாளர்கள் தமது உற்பத்தியை மீள கட்டியெழுப்ப அரசாங்கம் உதவித்தொகை வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்