ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 42 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 6 சமத்துவபுரங்களை சென்னை, தலைமைச் செயலகத்தில் காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
நிறைவடைந்த புதிய திட்டங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (பிப். 6) தொடக்கி வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 42 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 6 சமத்துவபுரங்கள், நாமக்கல் மாவட்டம், புதுப்பட்டி முதல் கெடமலை வரை ரூ. 34 கோடியே 12 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலை, ரூ. 212 கோடியே 86 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள், பாலங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக்கூடங்கள், பொது விநியோகக் கடைகள், என மொத்தம் ரூ. 289 கோடியே 38 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.