50 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

அனர்த்தங்களால் 627 பேர் பலி : 190 பேரைக் காணவில்லை; ஒட்டுமொத்தமாக 21 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு.

நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை ஓரளவு குறைவடைந்துள்ளது. எனினும் ஆரம்பித்துள்ள வடகீழ் பருவ பெயர்ச்சி மழை காரணமாக ஏற்கனவே மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் அவ் எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த சேனாதீர தெரிவித்தார்.

அதற்கமைய 5 மாவட்டங்களில் 50 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

கண்டி, கேகாலை, மாத்தளை, குருணாகல் மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இவை தவிர இரண்டாம் கட்டத்தில் 4 மாவட்டங்களில் 22 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலாம் கட்டத்தில் 7 மாவட்டங்களில் 27 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் நடைமுறையிலிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கடந்த நவம்பர் 21ஆம் திகதி முதல் நேற்று இரவு வரையான காலப்பகுதியில் தித்வா புயலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 இலட்சத்தைக் கடந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 627 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 190 பேர் காணாமல் போனோர் பட்டியலிலேயே உள்ளனர். அதிகளவான உயிரிழப்புக்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன. இம்மாவட்டத்தில் மாத்திரம் 232 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 81 பேர் காணாமல் போயுள்ளனர்.

அடுத்ததாக பதுளையில் 90 பேர் உயிரிழந்துள்ளதோடு, 11 பேர் காணாமல் போயுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழந்துள்ளதோடு, 35 பேர் காணாமல் போயுள்ளனர். குருணாகலில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 11 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேபோன்று புத்தளம் (35), கேகாலை (32), மாத்தளை (28), கம்பஹா (13), அநுராதபுரம் (12) ஆகிய மாவட்டங்களிலும் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. அது மாத்திரமின்றி காலி, திருகோணமலை தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிலும் 4517 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 25 மாவட்டங்களிலும் 76 066 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் தற்போது படிப்படியாக அவற்றிலிருந்து வெளியேறி தமது இருப்பிடங்களில் மீளக் குடியேற ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் நேற்று வரை 27 663 குடும்பங்களைச் சேர்ந்த 89 857 பேர் மாத்திரமே 956 தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர். எவ்வாறிருப்பினும் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 611 530 குடும்பங்களைச் சேர்ந்த 2, 179, 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்ககப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கோந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிலாபத்திலிருந்து புந்தனம் மற்றும் காங்கோந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.

கடல் நிலை : சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் காங்கோத்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓhளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை, காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Annalingam Annarasa

2026 ஆம் ஆண்டுக்கான ஊர்காவற்துறை பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி!

December 8, 2025

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும்

jail1

வாளுடன் வட்டுக்கோட்டையில் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்

December 8, 2025

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலி கோவில் பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

December 8, 2025

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.வடக்கு ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ளது அமோரி

chand

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

December 8, 2025

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர்

Judment

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் போலி சட்டத்தரணி?

December 8, 2025

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

old

யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம்

December 8, 2025

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும்

chinm

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு விளைவிக்கிறார் சின்மயி!

December 8, 2025

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு

chira

சிரஞ்சீவி – நயன்தாரா இணைவு

December 8, 2025

நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தில் இருந்து சசிரேகா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின்

chami_1

பெண் விமானியின் கோரிக்கை; தந்தை வழித்தன்மையை உறுதிப்படுத்த கிரிக்கெட் வீரர் மறுப்பு

December 8, 2025

தனது குழந்தையின் தந்தைவழித்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கையைப் பெற நீதிமன்ற உத்தரவைக் கோரிய பெண் விமானியின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர்

nori

பிரித்தானியாவின் நொரிஸ் முதற் தடவையாக சம்பியனானார்

December 8, 2025

முதற் தடவையாக மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் போர்மியுலா வண் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அபு தாபி குரான்

sel

செல்டா விகோவிடம் தோற்ற றியல் மட்ரிட்

December 8, 2025

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் 0-2 என்ற

chi

மனித நுகர்வுக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்

December 8, 2025

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல